ADDED : ஜூலை 24, 2026 02:02 AM
ஏற்காடு: சேலம் கிழக்கு ஆர்.டி.ஓ., தியாகராஜன் தலைமையில், போக்கு-வரத்து துறை அதிகாரிகள் ஏற்காட்டில், நேற்று வாகன தணிக்-கையில் ஈடுபட்டனர்.
ஏற்காட்டில் உள்ள ஒண்டிக்கடை ரவுண்டானா, பஸ் ஸ்டாண்ட் சாலை, படகு இல்ல சாலை மற்றும் பிரதான சாலைகளில் தணிக்-கையில் ஈடுபட்டனர்.ஓட்டுனர் உரிமம், காப்பீடு, தகுதிச் சான்று மற்றும் புகை சான்று உள்ளிட்ட முறையான ஆவணங்கள் ஏதுமின்றி இயக்கப்பட்ட, 2 ஆட்டோ, பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும், 2 வேன்கள், 2 சரக்கு வாகனங்கள் மற்றும் 1 ஜே.சி.பி., இயந்திரம் என மொத்தம், 7 வாகனங்களை ஆர்.டி.ஓ., தலைமையிலான குழு-வினர் பறிமுதல் செய்து ஏற்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் விதிகளை மீறி சீட் பெல்ட் அணியாமல் சென்ற, 5 நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கும், ஹெல்மெட் அணி-யாமல் ஆபத்தான முறையில் பயணித்த, 10 இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரே நாளில், 80,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
