/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணம் துணை முதல்வர் உதயநிதி நாளை வழங்க ஏற்பாடு
/
707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணம் துணை முதல்வர் உதயநிதி நாளை வழங்க ஏற்பாடு
707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணம் துணை முதல்வர் உதயநிதி நாளை வழங்க ஏற்பாடு
707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணம் துணை முதல்வர் உதயநிதி நாளை வழங்க ஏற்பாடு
ADDED : அக் 19, 2024 02:37 AM
சேலம்: சேலத்தில் நாளை, 707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகர-ணங்கள் வழங்கி, துணை முதல்வர் உதயநிதி பேசுகிறார்.
இது குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று நடக்கும் அரசின் பல்-வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் துணை முதல்வர் உதயநிதி, மாலை 4:00 மணிக்கு சேலம் வருகிறார். மாவட்ட எல்லையான தலைவாசல் பகுதியில், அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் சார்பில் அதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
சேலத்தில் இரவு தங்கும் அவர், 20ம் தேதி காலை, 11:00 மணிக்கு சேலம் நேரு கலையரங்கில், சேலம், நாமக்கல் மாவட்-டத்தில் உள்ள, 707 ஊராட்சிகளுக்கு கருணாநிதி விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார். அதை ஊராட்சி தலைவர், செயலர் உள்ளிட்ட 2,000க்கும் மேற்பட்டவர்கள் பெற்று கொள்-கின்றனர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். மாலை, 4:00 மணிக்கு கருப்பூர் தீர்த்தமலை கவுண்டர் திருமண மண்டபத்தில், தி.மு.க., மாநில இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில், துணை முதல்வர் உதயநிதி
பேசுகிறார்.
சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பனமரத்துப்பட்டி ஏரியை மேம்படுத்துவதற்கான முன்மொழிவு அரசுக்கு சென்றுள்ளதால், அடுத்த கட்ட நடவ-டிக்கை தொடரும். சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவம-னையில் நிலவும், பிரச்னைகளை களைய விரைவில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனத்துக்கு எடுத்து செல்லப்-படும். சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சந்திப்பில் ஏற்படும் போக்கு-வரத்து நெரிசலை, மத்திய அரசின் பார்வைக்கு எடுத்து சென்று, தீர்வுகாண வழிவகை
செய்யப்படும்.
இவ்வாறு கூறினார்.
கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி
எம்.பி., ஆகியோர்
உடனிருந்தனர்.