/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தத்தெடுப்பு தினத்தை ஒட்டி71 பிராணிகளுக்கு தடுப்பூசி
/
தத்தெடுப்பு தினத்தை ஒட்டி71 பிராணிகளுக்கு தடுப்பூசி
தத்தெடுப்பு தினத்தை ஒட்டி71 பிராணிகளுக்கு தடுப்பூசி
தத்தெடுப்பு தினத்தை ஒட்டி71 பிராணிகளுக்கு தடுப்பூசி
ADDED : அக் 12, 2025 01:54 AM
சேலம்:உலக தத்தெடுப்பு தினத்தை ஒட்டி, சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில், கால்நடை பராமரிப்புத்துறையுடன் பிராணிகள் நல தன்னார்வ அமைப்பு இணைந்து நேற்று இலவச முகாமை நடத்தின. கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பிரகாஷ் தொடங்கிவைத்தார்.
காலை, 9:00 முதல் மதியம், 12:00 மணி வரை நடந்த முகாமில், 69 நாய்கள், 4 பூனைகளை, அவற்றின் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். நாய்களுக்கு, ரேபிஸ் தடுப்பூசி உள்பட நோய் தொற்றுகளுக்கான தடுப்பூசி, பூனைகளுக்கு நோய் தடுப்பூசி போடப்பட்டது. ஏற்பாடுகளை கால்நடைத்துறை உதவி இயக்குனர் அருள் பிரகாசம், தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.