ADDED : ஜூலை 26, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாநகரில், 8 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார். அதன்படி கிச்சிப்பாளையம் பிரபா, அம்மாபேட்டை மகளிர் ஸ்டேசனுக்கும், அங்கு பணியாற்றிய கஸ்துாரி கிச்சிப்பாளையத்துக்கும் மாற்றப்பட்டனர். கருப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா, சூரமங்கலம் மகளிர் ஸ்டேஷனுக்கும், அங்கு பணியாற்றிய செல்வராணி கருப்பூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் இரும்பாலை பழனி அன்னதானப்பட்டிக்கும், அங்கு பணியாற்றிய கண்ணன் இரும்பாலைக்கும், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு தமிழரசி அம்மாபேட்டைக்கும், அங்கு பணியாற்றிய மோகனா, மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.