தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெரியார் பல்கலையில் செனட் உறுப்பினர்கள் 8 பேர் தேர்வு

பெரியார் பல்கலையில் செனட் உறுப்பினர்கள் 8 பேர் தேர்வு

பெரியார் பல்கலையில் செனட் உறுப்பினர்கள் 8 பேர் தேர்வு


ADDED : பிப் 17, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்; பெரியார் பல்கலையில் புதிதாக, 8 பேர் ஆட்சிப்-பேரவை (செனட்) உறுப்பினர்

களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலை சாசன விதிகளின் படி, பல்கலை ஆளுகைக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்-களில் வசிக்கும் பட்டம் பெற்ற மாணவர்கள், பல்-கலை ஆட்சிப்பேரவையில் (செனட்) இடம் பெறுவர். பட்டதாரி-களின் பதிவின் வாயிலாக, பட்டதாரி தொகுதி தேர்தல் மூலம் மாவட்டத்துக்கு இருவர் வீதம், ஆட்சிப்பேரவை உறுப்பினர்களாக தேர்வு செய்-யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் பட்ட-தாரிகள் மூன்று ஆண்டுகள் ஆட்சிப்பேரவை உறுப்பினர்களாக செயல்படுவர்.

அதன் விபரம்: சேலம் ஓமலுாரை சேர்ந்த முத்-துக்குமார், சேலம் முல்லை நகரை சேர்ந்த மணி-கண்டன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்-கோட்டை சேர்ந்த செல்வகுமார், ராசிபுரத்தை சேர்ந்த ராஜேஸ், தர்மபுரியை சேர்ந்த சிவகலை மற்றும் ராம்குமார், கிருஷ்ணகிரி போச்சம்பள்-ளியை சேர்ந்த விவேகானந்தன், பர்கூரை சேரந்த தமிழரசன் ஆகியோர், புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு நேற்று நியமன ஆணை பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us