ஓனரை தாக்கி ஹோட்டல் சூறை இருதரப்பில் 9 பேர் மீது வழக்கு
ஓனரை தாக்கி ஹோட்டல் சூறை இருதரப்பில் 9 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 27, 2026 03:38 AM
இடைப்பாடி: இடைப்பாடி, கள்ளுக்கடையில், முருகேசன் என்பவர் ஹோட்டல் நடத்துகிறார். அங்கு சமையல் மாஸ்டராக பெரிய-சாமி, சப்ளையராக கர்ணன் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் கல்லபாளையத்தை சேர்ந்த நந்தகுமார், 30, பெரியண்ணன், 29, ஆகியோர், போதையில் வந்து சாப்பிட்டனர். அதற்கு முருகேசன் பணம் கேட்டபோது, அந்த இருவரும் தகாத வார்த்தைகளில் திட்-டினர்.
தொடர்ந்து முருகேசன், கர்ணனை தாக்கினர். காயம் அடைந்த முருகேசன், கர்ணன், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நந்தகுமார், பெரியண்ணன், அவரது நண்பர்கள் சுரேந்தர், 27, விக்னேஷ், 26, தினேஷ், 25, அபிஷேக், 25, ஆகியோர் சேர்ந்து, ஹோட்டலில் புகுந்து சேர், டேபிள் உள்ளிட்ட பொருட்களை உடைத்தனர். இதுகுறித்த வீடியோ பரவியது. பின் சமையல் மாஸ்டர் பெரிய-சாமி கொடுத்த புகார்படி, பூலாம்பட்டி போலீசார் விசாரித்து, நந்த-குமார், 30, பெரியண்ணன், 29, சுரேந்தர், 27, விக்னேஷ், 26, தினேஷ், 25, அபிஷேக், 25, மீது வழக்குப்பதிந்தனர். அதேபோல் நந்தகுமார் புகார்படி, முருகேசன், பெரியசாமி, கர்ணன் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.
