ADDED : ஏப் 03, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
ஓமலுார், ஓமலுார் அருகே கருப்பணம்பட்டியை சேர்ந்தவர் பரணி, 25. அதே பகுதியில் மொபைல் கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 9 மொபைல் போன்கள், 15,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது.
அங்குள்ள கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, ஓமலுார் போலீசார் விசாரித்து, சேலம், அம்மாபேட்டை, பச்சப்பட்டியை சேர்ந்த மதன்ராஜ், 23, என்பவரை, நேற்று கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும், 2 பேரை தேடுகின்றனர்.
