ADDED : அக் 01, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி, அருந்ததியர் காலனியை சேர்ந்த கட்டட தொழிலாளி கார்த்திக், 33. இவர், 6 ஆண்டுக்கு முன், சேலம், திருவாக்கவுண்டனுாரை சேர்ந்த தமிழ்செல்வியை திருமணம் செய்தார்.
தற்போது, 9 மாத கர்ப்பிணியாக இருந்த தமிழ்செல்வி, கடந்த செப்., 24ல், சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்வதாக கூறி சென்றார். பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவரை காணாததால், கார்த்திக், நேற்று அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.