தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/இரு தரப்பினர் இடையே மோதல் சிறுவன், மாணவர் உள்பட 9 பேர் கைது

இரு தரப்பினர் இடையே மோதல் சிறுவன், மாணவர் உள்பட 9 பேர் கைது

இரு தரப்பினர் இடையே மோதல் சிறுவன், மாணவர் உள்பட 9 பேர் கைது


ADDED : நவ 23, 2026 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்: தாரமங்கலம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர், 18 வயது சிறுவன். பி.இ., முடித்துவிட்டு பந்தல் போடும் பணி செய்கிறார். இவரது தரப்புக்கும், எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்த, மற்றொரு தரப்புக்கும், கடந்த ஆங்கில புத்தாண்டின்போது வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்த எம்.பி.ஏ., படிக்கும் தினேஷ், 21, என்பவர், அவரது நண்பர்

நிகிலேஸ்வரன், 20, புகைப்படத்தை எடுத்துவரும்படி, நண்பர் தனுஷ், 22, சுந்தரமூர்த்தியிடம் கூறினார். அவர்கள் எடுத்துக்கொண்டு, நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, அம்பேத்கர் நகரில் பைக்கில் வந்தனர். அப்போது பந்தல் தொழிலாளி தரப்பினர், 'எதற்கு வேகமாக ஓட்டுகிறீர்கள்' என கேட்க, தனுஷ், சுந்தரமூர்த்தி, வேறு வழியில் சென்றனர். ஆனால் செங்குந்தர் மண்டபம் அருகே வந்தபோது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொழிலாளி தரப்பினர், பட்டாக்கத்தி, பாட்டில், கட்டையால் தினேஷ் தரப்பினரை தாக்கினர். காயம் அடைந்த தினேஷ், நிகிலேஸ்வரன், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினேஷ் தரப்பினர், 'ஸ்கார்பியோ' காரில் மோதியதில், தொழிலாளி, அவரது தரப்பை சேர்ந்த எழில், 19, காயம் அடைந்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினேஷ் புகார்படி தாரமங்கலம் போலீசார், 5 பேர் மீது வழக்குப்பதிந்து, 16 வயது சிறுவன் உள்பட, 3 பேரை நேற்று கைது செயதனர். தொழிலாளி புகாரில், 7 பேர் மீது வழக்குப்பதிந்த போலீசார், தினேஷ், தனுஷ் உள்பட, 6 பேரை கைது செய்தனர். இரு பிரிவினர் மோதலால், சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us