/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
32 தேசியக்கொடிகளை சரியாக காட்டி அசத்தல் உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை
/
32 தேசியக்கொடிகளை சரியாக காட்டி அசத்தல் உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை
32 தேசியக்கொடிகளை சரியாக காட்டி அசத்தல் உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை
32 தேசியக்கொடிகளை சரியாக காட்டி அசத்தல் உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை
ADDED : நவ 03, 2024 02:37 AM
தாரமங்கலம்: முப்பத்தி இரண்டு நாடுகளின் தேசியக்கொடிகளை சரியாக தொட்டு காட்டி, 4 மாத பெண் குழந்தை, உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
சேலம், சின்ன கொல்லப்பட்டியை சேர்ந்த கார்த்திக், 26. இவரது மனைவி ஈஸ்வரி, 26. இவர் குழந்தைப்
பேறுக்கு, தாரமங்கலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அவ-ருக்கு பெண் குழந்தை பிறந்து, ஆதிரை என பெயர் சூட்டினர்.
குழந்தைக்கு, 3 மாதம் முடிந்ததும் பல்வேறு நாடுகளின் தேசியக்-கொடிகளை காட்டி, ஈஸ்வரி பயிற்சி அளித்துவந்தார். 4 மாதங்கள் முடிவதற்குள், இரு நாடுகளின் தேசிய கொடிகளை காட்டி அதில் ஈஸ்வரி கேட்கும் கொடியை ஆதிரை சரியாக தொட்டி காட்டினாள். தொடர் பயிற்சியால், 32 நாடுகளின் கொடியை, ஆதிரை சரியாக தொட்டு காட்டினாள். இந்நிகழ்வை வீடியோவாக பதிவு செய்த ஈஸ்வரி, கடந்த அக்., 7ல், 'நோபல்' உலக சாதனை புத்தகத்துக்கு அனுப்பினார். இதை ஆராய்ந்து, 22ல் நோபல் உலக சாதனை புத்தகத்தில், ஆதிரையின் பதிவு இடம்பிடித்தது. மேலும் ஆதிரைக்கு நோபல் உலக சாதனை சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டன. அதை, ஈஸ்வரி, அவரது குடும்பத்தினருடன் சென்று, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி,
அ.தி.மு.க., பொதுச்செயலர்
இ.பி.எஸ்., ஆகியோரிடம் காட்டி மகிழ்ந்தார்.
இதுகுறித்து ஈஸ்வரி கூறுகையில், ''நோபல் உலக சாதனை புத்த-கத்தில் இடம் பெற்ற குழந்தைகளின் பதிவை பார்த்தேன். அது-போன்று என் குழந்தையும் இடம்பெற பயிற்சி அளித்தேன். தற்-போது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி,'' என்றார்.