/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகராட்சி குழாயில் உடைப்பு பல நாட்களாக வீணாகும் குடிநீர்
/
மாநகராட்சி குழாயில் உடைப்பு பல நாட்களாக வீணாகும் குடிநீர்
மாநகராட்சி குழாயில் உடைப்பு பல நாட்களாக வீணாகும் குடிநீர்
மாநகராட்சி குழாயில் உடைப்பு பல நாட்களாக வீணாகும் குடிநீர்
ADDED : மே 04, 2024 10:03 AM
மேட்டூர்: மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டியில் காவிரி கரையோரம் உள்ள நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, சேலம் மாநகராட்சிக்கு தினமும், 14 கோடி முதல், 16 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதற்கு மேட்டூர் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு குடிநீர் சுத்திகரிப்பு செய்து, 60 கி.மீ.,ல் உள்ள சேலம் மாநகராட்சிக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து, 11வது வார்டு செல்லப்பன் தெரு, நுாலகம் அருகே மாநகராட்சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் பீறிட்டு வெளியேறி ஓடை போல சென்று அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில் பல நாட்களாக கலக்கிறது. இதன்மூலம் கோடைகாலத்தில் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.
அதேபோல், 11வது செல்லப்பன் நகர், 4 ரோடு அருகிலும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இரு குழாய்களையும் சீரமைக்க, சேலம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து மக்கள் வலியுறுத்தினர்.