/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜவுளி பூங்கா பெயரில் சாயப்பட்டறை அமைத்தால் நீதிமன்றத்தில் வழக்கு
/
ஜவுளி பூங்கா பெயரில் சாயப்பட்டறை அமைத்தால் நீதிமன்றத்தில் வழக்கு
ஜவுளி பூங்கா பெயரில் சாயப்பட்டறை அமைத்தால் நீதிமன்றத்தில் வழக்கு
ஜவுளி பூங்கா பெயரில் சாயப்பட்டறை அமைத்தால் நீதிமன்றத்தில் வழக்கு
ADDED : நவ 11, 2025 02:03 AM
சேலம், சேலத்தில், கொங்கு நண்பர்கள் சங்க தலைவர் தங்கவேல், செயலாளர் மதியரசு, பொருளாளர் மணிசங்கர் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில், ஜவுளி பூங்கா என்று அறிவித்து விட்டு தற்போது அங்கு, 55 சாயப்பட்டறைகள் அமைக்கப்படுவதை கண்டிக்கிறோம். கார்மென்ட்ஸ் நிறுவனம் அதிகளவில் வந்தால், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், சாயப்பட்டறைகள் அமைத்தால் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதோடு, விவசாய நிலங்கள் பாதிக்கப்படும், ஏற்கனவே திருப்பூர், மற்றும் பெருந்துறை சிப்காட்டில் உள்ள சாயப்பட்டறைகளால், நிலத்தடி நீர் மாசுபட்டு பொதுமக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர்,
ஒரு சிலர் லாபத்துக்காக, 10 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும், மாமாங்கம், வெள்ளக்கல்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களிடம் அமைச்சரோ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகளோ யாரும் கருத்து எதுவும் கேட்கவில்லை, சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். மேலும் அப்பகுதி மக்களுடன், கொங்கு நண்பர்கள் சங்கமும் இணைந்து போராட்டங்களில் ஈடுபடும்.
இவ்வாறு கூறினர்.

