/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இ.பி.எஸ்.,க்கு பிரமாண்ட வரவேற்பு நிர்வாகிகளுக்கு மா.செ., அறிவுரை
/
இ.பி.எஸ்.,க்கு பிரமாண்ட வரவேற்பு நிர்வாகிகளுக்கு மா.செ., அறிவுரை
இ.பி.எஸ்.,க்கு பிரமாண்ட வரவேற்பு நிர்வாகிகளுக்கு மா.செ., அறிவுரை
இ.பி.எஸ்.,க்கு பிரமாண்ட வரவேற்பு நிர்வாகிகளுக்கு மா.செ., அறிவுரை
ADDED : ஜன 03, 2026 07:31 AM

பனமரத்துப்பட்டி: அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சின், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயண பிரசார பொதுக்கூட்டம், சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டசபை தொகுதி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், நாளை மாலை, 5:00 மணிக்கு நடக்க உள்ளது.
இதற்கு சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் மைதானத்தில், பிரமாண்ட மேடை, பந்தல், மின்விளக்-குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை, சேலம் புற-நகர் மாவட்ட செயலர் இளங்கோவன், நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, ஒன்றிய, நகர செயலர்கள், மகளிர், மாணவரணி நிர்-வாகிகளுடன், பொதுக்கூட்ட ஏற்பாடு குறித்து ஆலோசித்தார்.
அப்போது அவர், 'இ.பி.எஸ்.,க்கு பிரமாண்ட முறையில் வர-வேற்பு அளிக்க வேண்டும்; வீரபாண்டி தொகுதியை சேர்ந்த, 50,000 பேர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், அவர்களுக்கு தேவையான இருக்கை, குடிநீர், சிற்றுண்டி, மருத்துவ உதவி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை, முறையாக செய்து தர வேண்டும்' என, இளங்கோவன் அறிவுறுத்தினார்.
வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, ஒன்றிய செயலர்களான, பன-மரத்துப்பட்டி மேற்கு ஜெகநாதன், கிழக்கு பாலச்சந்திரன், வீர-பாண்டி மேற்கு வருதராஜ், கிழக்கு வெங்கடேசன், சேலம் செல்-வபிரகாஷ், மல்லுார் நகர செயலர் பழனிவேலு, முன்னாள் எம்.எல்.ஏ., மனோன்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

