/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் வந்த சுற்றுலா அமைச்சருக்கு அமோக வரவேற்பு
/
சேலம் வந்த சுற்றுலா அமைச்சருக்கு அமோக வரவேற்பு
ADDED : அக் 05, 2024 01:11 AM
சேலம் வந்த சுற்றுலா அமைச்சருக்கு அமோக வரவேற்பு
சேலம், அக். 5-
சேலம் வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு, தி.மு.க.,வினர் அமோக வரவேற்பு அளித்தனர்.
தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறை அவரது சொந்த ஊரான சேலத்துக்கு நேற்று ரயிலில் வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பிருந்தா
தேவி, புத்தகம், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன் முதலாவது நடைமேடையில் இருந்து, சேலம் எம்.பி., செல்வகணபதி, தி.மு.க.,வின் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அமைச்சர் ராஜேந்திரனை வெளியே அழைத்து வந்தனர். அங்கு மேளதாளம் முழங்க கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் உள்ளிட்டவையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் நின்றபடி அமைச்சர், கட்சியினரின் மரியாதையை ஏற்றார். தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி புத்தகம், மலர் கொத்து கொடுத்து அமைச்சரிடம் ஆசி பெற்றனர்.
அங்கிருந்து காரில் புறப்பட்ட அமைச்சர், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஈ.வெ.ரா., சிலை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணாதுரை சிலை, அண்ணா பூங்கா அருகே கருணாநிதி சிலை, புது பஸ் ஸ்டாண்ட் அருகே, கட்சி அலுவலகத்தில் உள்ள ஆறுமுகம் சிலைக்கு மாலை அணிவித்தார். இதையடுத்து பூலாவரி சென்ற அவர், அங்குள்ள முன்னாள் அமைச்சர் ஆறுமுகம், செழியன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின் அஸ்தம்பட்டியில் உள்ள தொகுதி அலுவலகம் சென்றார். அங்கும் மேள தாளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் மக்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின், மக்களிடம் மனுக்கள் பெற்ற அவர், கட்சியினரை சந்தித்து பேசினார். முன்னதாக ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் தொடங்கி வழிநெடுக மக்கள் இருபுறமும் திரண்டு நின்று அமைச்சரை பார்த்து கை அசைத்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் சாலை இருபுறமும் கட்சிக்கொடி, தோரணம், கட்- அவுட் வைத்து, பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பாண்டிதுரை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அழகிரி, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரமேஷ், வக்கீல் அணி அமைப்பாளர் ராம்பிரகாஷ், பொறியாளர் அணி அமைப்பாளர் நாகராஜ், டாஸ்மாக் தொ.மு.ச., செயலர் முத்துசாமி, மாநகர் அவைத்தலைவர் முருகன், மாநகர் செயலர் ரகுபதி, துணை செயலர்கள் கணேசன், தினகரன், கோமதி பரமசிவம், பொருளாளர் ெஷரீப், மாநகர் பகுதி செயலர்கள் தமிழரசன், பன்னீர்செல்வம், ஜெயகுமார், சாந்தமூர்த்தி, பிரகாஷ், மோகன், தனசேகரன், ஜெய், ராஜா, ஜெகதீஷ், சரவணன், முருகன், கன்னங்குறிச்சி பேரூர் செயலர்கள் தமிழரசன், சேலம் வடக்கு ஒன்றிய செயலர் நடராஜன், அசோகன், ஓமலுார் கிழக்கு ஒன்றிய செயலர் ரமேஷ், தெற்கு ஒன்றிய செயலர் செல்வகுமரன், மாவட்ட கவுன்சிலர் சண்முகம், மல்லுார் டவுன் பஞ்சாயத்து தலைவி லதா, துணைத்தலைவர் அய்யனார் உள்பட பலர் பங்கேற்றனர்.