/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடைப்பாடி வனப்பகுதியில் சிறுத்தை? எலத்துார் காப்புக்காட்டில் முன்னெச்சரிக்கை
/
இடைப்பாடி வனப்பகுதியில் சிறுத்தை? எலத்துார் காப்புக்காட்டில் முன்னெச்சரிக்கை
இடைப்பாடி வனப்பகுதியில் சிறுத்தை? எலத்துார் காப்புக்காட்டில் முன்னெச்சரிக்கை
இடைப்பாடி வனப்பகுதியில் சிறுத்தை? எலத்துார் காப்புக்காட்டில் முன்னெச்சரிக்கை
ADDED : ஜூலை 13, 2024 12:49 AM
ஓமலுார்: சேலம் மாவட்டம் இடைப்பாடி தாலுகா ஆனைப்பள்ளத்தில், கடந்த மாதம், 6 இரவு ஒரு ஆட்டை, மர்ம விலங்கு கடித்து கொன்றது. அதேபோல் கடந்த, 9ல் கோம்பைக்காட்டில் ஒரு மாட்டை, மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதனால் வனத்துறையினர், 13 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி கண்காணித்து வரு-கின்றனர். நேற்று முன்தினம் கூண்டு வைத்து, 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர், இரவு, பகலாக கண்கா-ணித்து வருகின்றனர்.
டேனிஷ்பேட்டை வனச்சரகம் எலத்துார் காப்புக்காட்டில், 10 மாதங்களுக்கு மேலாக சிறுத்தை நட-மாட்டம் உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இடைப்பாடி தாலுகா வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் எலத்துார் காப்புக்காடு பகுதிக்கு சிறுத்தை வர வாய்ப்புள்ளதால், அதன் அடிவார பகுதியான மூக்கனுார், எலத்துார், தொட்டியனுார், குண்டுக்கல், காருவள்ளி உள்பட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்க-ளிடம், 'இரவில் யாரும் வெளியே படுக்க வேண்டாம். தனியே வெளியே போக வேண்டம். கால்நடைகளை பத்திரப்படுத்தி பாதுகாப்பாக கட்டி வையுங்கள். சிறுத்தையின் எச்சங்கள் கிடக்கிறதா, காலடி தடங்கள் தெரி-கிறதா என்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்' என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அத்-துடன் இரவில் வனத்துறையினர், 'ரோந்து' பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

