/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் தவறி விழுந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி
/
கிணற்றில் தவறி விழுந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி
கிணற்றில் தவறி விழுந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி
கிணற்றில் தவறி விழுந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி
ADDED : ஆக 31, 2024 01:31 AM
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா காஞ்சேரி காட்டுவளவை சேர்ந்தவர் மாரிமுத்து, 54. இவரது மனைவி விஜயா, 50. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மாரிமுத்து சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டி-ருந்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு வீடு அருகே உள்ள கிணற்றில் இறங்கியபோது அவர் தவறி விழுந்து மூழ்கினார். மூத்த மகன் மகேந்திரன் உள்ளிட்டோர், கிணற்றில் தேடிய-போதும் மீட்க முடியவில்லை. பின் காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டனர். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்-கின்றனர்.
பெண் சாவுகாரிப்பட்டி அடுத்த கருமாபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் மனைவி தமிழரசி, 46. விவசாயியான இவர் நேற்று மாலை, 5:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள கிணற்றில், தவறி விழுந்தார். தகவல் அறிந்து
வாழப்பாடி தீயணைப்பு துறையினர் வந்து தமிழரசியை சடலமாக மீட்டனர். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கிணற்றில் இருந்த மின்-மோட்டாரை கயிறு மூலம் தமிழரசி எடுக்க முயன்றபோது கயிறு அறுந்து கிணற்றில் தமிழரசி விழுந்து இறந்தது விசாரணையில் தெரிந்தது' என்றனர்.