/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உலாவும் சிறுத்தை ஜோடி மலையடிவார மக்கள் கலக்கம்
/
உலாவும் சிறுத்தை ஜோடி மலையடிவார மக்கள் கலக்கம்
ADDED : பிப் 26, 2024 06:59 AM
மேட்டூர், : மலையடிவார கிராமத்தில் உலாவரும் சிறுத்தை ஜோடி ஆடு, மாடுகள் வளர்க்கும் விவசாயிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டூர், சாம்பள்ளி ஊராட்சி, கோம்பைகாடு கிராமம் பாலமலை அடிவாரம் உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விவசாயம், ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழில் செய்கின்றனர். கடந்த ஒரு மாதமாக, வீடுகளில் வளர்க்கும் நாய்கள், ஆடுகளை மர்மவிலங்கு கடித்து கொன்றது.
ஆங்காங்கே பல ஆட்டு பட்டிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது விவசாயிகளை கலக்கத்தில் ஆழ்த்தியது. தகவல் அறிந்த மேட்டூர் வனத்துறையினர், மர்மவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதியில் மூன்று மேராக்களை பொருத்தினர்.
எனினும், மர்மவிலங்கு நடமாட்டம் எதுவும் பதிவாகவில்லை. இரு நாட்களுக்கு முன்பு அதிகாலை கோம்பைக்காடு விவசாயி சித்தன் வீட்டில் வளர்க்கும் நாய் குரைத்துள்ளது. அதனை கேட்டு சித்தன் வெளியே வந்தார். அப்போது, அங்கு ஜோடியாக இரு சிறுத்தைகள் நின்று கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் அங்கு வந்ததால், சிறுத்தைகள் அங்கிருந்து ஓடி விட்டன. பாலமலை அடிவாரம் பகுதியில், சிறுத்தைகள் ஜோடியாக உலா வருவது அப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்கும் விவசாயிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது

