/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிறந்த குழந்தை உயிரிழந்ததால் தனியார் மருத்துவமனை முற்றுகை
/
பிறந்த குழந்தை உயிரிழந்ததால் தனியார் மருத்துவமனை முற்றுகை
பிறந்த குழந்தை உயிரிழந்ததால் தனியார் மருத்துவமனை முற்றுகை
பிறந்த குழந்தை உயிரிழந்ததால் தனியார் மருத்துவமனை முற்றுகை
ADDED : செப் 28, 2024 01:21 AM
பிறந்த குழந்தை உயிரிழந்ததால்
தனியார் மருத்துவமனை முற்றுகை
வாழப்பாடி, செப். 28
வாழப்பாடியில், பிறந்த குழந்தை உயிரிழந்ததால் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாமலை, 22. இவரது மனைவி சுகந்தி, 19, கர்ப்பமான நிலையில் கடந்த ஓராண்டாக வாழப்பாடியில் பேளூர் பிரிவு ரோடு அருகே உள்ள, தீபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த, 24 காலை, 11:00 மணிக்கு பிரசவத்திற்காக தீபம் மருத்துவமனையில் சுகந்தி அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு, 7:00 மணிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை எந்த அசைவுமின்றி சத்தம் இல்லாமல் இருந்துள்ளது.
இதையடுத்து, மருத்துவரின் அறிவுறுத்தலின்படி, சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று காலை, 7:00 மணிக்கு குழந்தை உயிரிழந்தது. குழந்தை தலையில் ரத்த கட்டி ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சையில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்து, உயிரிழந்த குழந்தையின் பெற்றோர், உறவினர்கள், தீபம் மருத்துவமனையை முற்றுகையிட்டு, குழந்தையின் சடலத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, உயிரிழந்த குழந்தையின் பாட்டி சரஸ்வதி கூறியதாவது:
தன் மகள் சுகந்தி கர்ப்பமானது முதல், கடந்த ஓராண்டாக தீபம் மருத்துவமனையில் ஸ்கேன், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பெற்று வந்தார். சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை வெளியே வராததால், கருவிகளை பயன்படுத்தி வெளியே எடுத்துள்ளதாக தெரிகிறது. குழந்தை சத்தம், அசைவு எதுவும் இல்லாமல் இருந்தது. குழந்தை மலம் சாப்பிட்டதாக மருத்துவர் தெரிவித்து, மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.
உடனே, சேலத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை தலையில் ரத்தக்கட்டி
இருப்பதாக தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்தாலும், குழந்தை உயிர் பிழைப்பதில் சிரமம் என்று தெரிவித்தனர். எனவே, நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கும் அதேபோல்
தெரிவித்தனர். குழந்தை பிறந்த பிறகும், தலையில் ரத்தக்கட்டி இருப்பது குறித்து தெரிவிக்கவில்லை. குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு கூறினார்.