/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க.,வினரை வெளியேற்ற தி.மு.க.,வினர் முயன்றதால் தள்ளுமுள்ளு: கூட்ட அரங்கில் படுத்து உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர்
/
அ.தி.மு.க.,வினரை வெளியேற்ற தி.மு.க.,வினர் முயன்றதால் தள்ளுமுள்ளு: கூட்ட அரங்கில் படுத்து உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர்
அ.தி.மு.க.,வினரை வெளியேற்ற தி.மு.க.,வினர் முயன்றதால் தள்ளுமுள்ளு: கூட்ட அரங்கில் படுத்து உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர்
அ.தி.மு.க.,வினரை வெளியேற்ற தி.மு.க.,வினர் முயன்றதால் தள்ளுமுள்ளு: கூட்ட அரங்கில் படுத்து உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர்
ADDED : டிச 25, 2024 07:40 AM
சேலம்: மாநகராட்சி கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், அவர்களை வெளியேற்ற, தி.மு.க., கவுன்சிலர்கள் முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அ.தி.மு.க கொறடா கூட்டரங்கில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார்.
சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., கவுன்சிலர் இளங்கோ: அம்மாபேட்டை பிரதான சாலையில் ஆக்கிரமிப்பால், டவுன் பஸ்களை இயக்க தடங்கல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.அ.தி.மு.க., கொறடா செல்வராஜூ: பாதாள சாக்கடை பணியில், ஒரு வீடு இல்லாத பகுதி, மாநகராட்சி சாலை இல்லாத இடங்களில் கூட, இணைப்பு வழங்கி வருகின்றனர். 3, 4வது, 'பேக்கேஜ்' பணிகள் மேற்கொள்வது குறித்த வழக்கு, நீதிமன்றத்தில் இருக்கும்போது, குறைவாக ஒப்பந்தம் கேட்ட நிறுவனங்களை விட, 140 கோடி ரூபாய் கூடுதலாக கேட்ட நிறுவனத்துக்கு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனத்துக்கு எதற்காக பணிகள் வழங்கப்பட்டன?தி.மு.க., கவுன்சிலர் தெய்வலிங்கம்: மாநகராட்சி முழுதும் பயோகாஸ், சோலார் பிளான்ட்களை செயல்படுத்தினால், பல கோடி ரூபாய் மின்கட்டணம் மீதமாகும்.பல லட்சம் ரூபாய் கொள்ளைதி.மு.க., கவுன்சிலர் அசோகன்: கொண்டலாம்பட்டியில் உள்ள அம்பாள் ஏரி சாலை, சீரங்கன் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு, புது பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்கு இணையாக, 'ஏ' பிரிவு மண்டல வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை, 'சி' பிரிவு மண்டலமாக மாற்ற வேண்டும்.கமிஷனர் ரஞ்ஜீத்சிங்: குறைபாடு இருப்பின் மண்டல அளவில் தீர்மானம் இயற்றி அனுப்பினால், வரி விதிப்பு குழுவிடம் ஆலோசித்து, மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கலாம். சூரமங்கலம் மண்டல அலுவலக பழைய கட்டடம், பற்றாக்குறையால் அதை இடித்துவிட்டு, அங்கேயே, 5 கோடி ரூபாயில் புது கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்காலிகமாக சத்திரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தை பொறுத்தவரை, தாமதமாகிக்கொண்டே சென்றால், மீண்டும் மீண்டும் சிக்கல் உருவாகி, பணியை முடிக்க முடியாமல் போகும். அரசு அனுமதி, வழிகாட்டுதலுடன் பணி நடக்கிறது. விரைவில் முடிக்க, கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி: மாநகராட்சியில், டி.பி.சி., பணியாளர், 700 பேர் இருப்பதாக கணக்கு காட்டுகின்றனர். 400 பேர் தான் பணிபுரிகின்றனர். இதில் பல லட்சம் ரூபாய் கொள்ளை போகிறது. வ.உ.சி., மார்க்கெட்டில் விதிமீறி, சுற்றிலும் கடை போடப்பட்டு, ஊழல் நடக்கிறது. என் வார்டில் நடக்கும் பணிகளை, தி.மு.க., கவுன்சிலர்கள் தடுக்கின்றனர்.இவரது பேச்சுக்கு, தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க., வெளிநடப்பு செய்வதாக, யாதவமூர்த்தி, செல்வராஜ் தெரிவித்தனர். அப்போது உதவி கமிஷனர் வேடியப்பன், 'வெளிநடப்பு செய்யும் முன், என் விளக்கத்தை கேட்டுவிட்டு செல்லுங்கள்' எனக்கூறினார்.'மக்கள் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்வதை தடுக்க அதிகாரம் கொடுத்தது யார்?' எனக்கேட்ட செல்வராஜூ, 'கொச்சைப்படுத்திவிட்டீர்கள்' எனக்கூறி, மேயர் இருக்கை முன் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். உடன் யாதவமூர்த்தி, சசிகலா, மோகனபிரியா, வரதராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்களும் அமர்ந்தனர்.அதற்கு, 'வெளியே சென்று போராட்டம் நடத்துங்கள்' என, தி.மு.க., கவுன்சிலர்கள் அசோகன், இளங்கோ, சாந்தமூர்த்தி, மூர்த்தி, தெய்வலிங்கம் ஆகியோர் கூறி, அ.தி.மு.க., கவுன்சிலர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, செல்வராஜ், அவையில் படுத்து உருண்டார். பின், தி.மு.க., கவுன்சிலர்கள், அவரது கையை பிடித்து இழுத்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிறிது நேரம் சலசலப்பு உண்டானது. பின், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.இதுகுறித்து யாதவமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ''விசைத்தறி தொழிலாளர்கள் மீது வரி விதிப்பு, பாதாள சாக்கடை திட்டம், பெரியார் பேரங்காடி, வ.உ.சி., மார்க்கெட் உள்ளிட்ட ஊழல் குறித்து பேசினோம். இவற்றை கொச்சைப்படுத்தி, தி.மு.க., கவுன்சிலர்கள் பேசியதால் வெளிநடப்பு செய்தோம்,'' என்றார்.