/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
.போராட்டத்தை கண்காணிக்க அதிநவீன மொபைல் வாகனம் தயார்
/
.போராட்டத்தை கண்காணிக்க அதிநவீன மொபைல் வாகனம் தயார்
.போராட்டத்தை கண்காணிக்க அதிநவீன மொபைல் வாகனம் தயார்
.போராட்டத்தை கண்காணிக்க அதிநவீன மொபைல் வாகனம் தயார்
ADDED : டிச 06, 2025 06:08 AM
சேலம்: சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், போராட்டம்
ஆகியவற்றை கண்காணிக்க, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன வாகனம் தயார்
செய்யப்பட்டுள்ளது.
அதில் டிஜிட்டல் திரை; மடிக்கணினி; ஒயர்லஸ்; '4ஜி' இணைய தள இணைப்பு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பம்; கண்கா-ணிப்பு அமைப்புடன் ஜி.பி.எஸ்., வசதி; நவீன, மொபைல் கேம-ராக்கள்; காட்சிகளை பதிவு செய்ய, 24 மணி நேர சேமிப்பு; அனைத்து வகை தொழில்நுட்பத்தை இணைக்கும்படி, 'நெட்ஒர்க்' வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப பயன்-படுத்தும்படி, 'டிரோன்' இணைக்கப்பட்டுள்ளது.பேட்டரி, ஜெனரேட்டர், சோலார் பேன், மைக், ஸ்பீக்கர், இரு
கணினிகள், 8 லைட், 2 'டிவி', 8 இருக்கைகள் உள்ளன. இந்த டெம்போ டிராவலர் வாகனம், மக்கள் கூட்டம், ஆர்ப்-பாட்டம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி கண்கா-ணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாநகர போலீசார் மூலம் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்-தனர்.
முன்னதாக அந்த வாகனத்தை, மாநகராட்சி சார்பில் வழங்கி, 'காவல் துறை' பெயரில் மாற்ற வட்டார போக்குவரத்து அலுவல-கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

