நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி,கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஜருகுமலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் மழைநீர், ஓடை வழியே, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையை கடந்து, நாழிக்கல்பட்டி ஏரிக்கு செல்கிறது. அதில் சேலம் -நாமக்கல் நெடுஞ்சாலையோரம், நாழிக்கல்பட்டி பிரிவு அருகே மழைநீர் ஓடை, குப்பை கிடங்கு போல் மாறியுள்ளது. சாலையோரம் நின்று ஓடையில்
பிளாஸ்டிக், கட்டட கழிவு, பழைய துணிகளை கொட்டுகின்றனர். ஓடையில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் ஏரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், நெடுஞ்சாலையில் புகை மண்டலம் சூழ்ந்துகொள்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. ஓடையில் குப்பை கொட்டுவதை தடுத்து, ஏரிக்கு மழைநீர் செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

