sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'கழிவுநீர் கால்வாய் இல்லாத ஊருக்கு சுத்திகரிப்பு நிலையம் தேவையில்லை'

/

'கழிவுநீர் கால்வாய் இல்லாத ஊருக்கு சுத்திகரிப்பு நிலையம் தேவையில்லை'

'கழிவுநீர் கால்வாய் இல்லாத ஊருக்கு சுத்திகரிப்பு நிலையம் தேவையில்லை'

'கழிவுநீர் கால்வாய் இல்லாத ஊருக்கு சுத்திகரிப்பு நிலையம் தேவையில்லை'


ADDED : மே 22, 2025 02:12 AM

Google News

ADDED : மே 22, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி, 'எருமப்பட்டி டவுன் பஞ்.,க்குட்பட்ட, 10 வார்டுகளில் கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு வசதியே இல்லாத நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தேவையில்லை' என, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த டவுன் பஞ்.,க்குட்பட்ட, 15 வார்டுகளில், ஐந்து வார்டுகளில் மட்டுமே கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு வசதி உள்ளது. மீதமுள்ள, பத்து வார்டுகளில் கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால், மழைக்காலங்களில் மழை நீருடன், கழிவுநீரும் சேர்ந்து சாலையில் பாய்ந்தோடி வருகிறது. இதுகுறித்து டவுன் பஞ்., தலைவரிடம் பலமுறை தெரிவித்தும் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த, நான்கு மாதங்களுக்கு முன், எருமப்பட்டி டவுன் பஞ்.,ல், ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில், கொல்லிமலை அடிவாரம், சிங்களகோம்பை ஏரி அருகே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள், சிங்களகோம்பை ஏரி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள சிங்களகோம்பை ஏரி பகுதியை, நேற்று மதியம் கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த மக்கள், 'கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இப்பகுதியில் அமைத்தால், விவசாயம் பாதிக்கப்படும்; குடிநீர் தட்டுப்பாடு, கால்நடைகளுக்கு நோய் தாக்கம் ஏற்படும் என தெரிவித்து, இந்த திட்டம் வேண்டாம்' என, தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எருமப்பட்டி டவுன் பஞ்.,க்குட்பட்ட, 10 வார்டுகளில் இதுவரை கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் உள்ளது. கடந்த தேர்தலின்போது, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், இப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படும் என, வாக்குறுதி அளித்தனர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு, எதிர்க்கட்சியான அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காதது அதிர்ச்சியளிக்கிறது' என்றனர்.






      Dinamalar
      Follow us