/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடி கிருத்திகை பூஜை: திரளான பக்தர்கள் தரிசனம்
/
ஆடி கிருத்திகை பூஜை: திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜூலை 21, 2025 04:19 AM
சேலம்: ஆடி கிருத்திகையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பல்-வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்-தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆடி கிருத்திகையையொட்டி, சேலம், அம்மாபேட்டை, குமரகிரி பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று, உற்சவர் சுப்ரமணிய-ருக்கு பால் அபிேஷகம் செய்து சர்வ அலங்காரத்துடன் மகா தீபாராதனையுடன் பூஜை செய்யப்பட்டது. அதேபோல் அம்மாபேட்டை பாலசுப்ரமணியர் கோவிலில், மூலவர், உற்சவருக்கு பால் அபி ேஷகம் செய்து மூலவருக்கு திருநீறு அலங்காரத்தில் பூஜை செய்யப்பட்டது. பட்டைக்கோவில் பாவடி முருகன், சுகவனேஸ்வரர் கோவில் சுகவன சுப்ரமணியர், நெத்திமேடு ஞானதண்டாயுதபாணி, ஊத்துமலை பாலசுப்ர ம-ணியர், பேர்லண்ட்ஸ் முருகன் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் நடந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள்
தரிசனம் செய்தனர்.
தாரமங்கலம் சுப்ரமணியர் மற்றும் வேலாயுத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பூக்கள், சந்தனக்காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
தாரமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில் முத்துக்குமரனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலை வாசனை திரவியங்களால் அபி-ஷேகம் செய்தனர். தொடர்ந்து திருநீரால் அலங்காரம், அம்ம-னுக்கு வண்ண பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்-டப்பட்டது.
இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் உள்ள சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜை நடந்தது. இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பாலமுருகன் சுவாமிக்கு, வெள்ளி கவசம் சாத்தப்பட்டது.
சங்ககிரி, மலை அடிவாரத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆறுமுகவேலர் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அக்கமாபேட்டை சுப்ரமணியர் சுவாமிக்கு பால், தயிர், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின் மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது.
சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்-தசாமி கோவிலில் கந்தசாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. கந்தசாமி மடியில் விநாயகரை அமர்த்திய கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் அருள்பா-லித்தார்.
ஆத்துார் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் மூலவருக்கு, பால், சந்தனம், தயிர், நெய், இளநீர் உள்பட, 16 வகை அபிேஷக பூஜை நடந்தது.
பின், மூலவர் பாலசுப்ர மணியர், ராஜ அலங்காரத்தில் அருள்பா-லித்தார். அதேபோல் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் நடந்த பூஜையில், மூலவர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தம்மம்பட்டி பாலதண்டாயுதபாணி, கெங்கவல்லி, தலைவாசல், புத்துார் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில், ஆடி கிருத்-திகை பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.