தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது


ADDED : மார் 17, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் கிச்சிப்பாளையம், ஹவுசிங்போர்டு குறிஞ்சி நகரை சேர்ந்-தவர் பிலால், 36, இவர் கடந்த 2021ல் அன்னதானப்பட்டி பகு-தியில், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜாமினில் வெளியே வந்த இவர், நீதிமன்ற விசார-ணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார். அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் தேடிவந்த நிலையில், கிச்சிப்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அன்னதானபட்டி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.சாக்கடையில் சடலம்

சேலம், மார்ச் 17

சேலம் செவ்வாய்பேட்டை, திருச்சி மெயின்ரோடு பகுதியில் உள்ள சாக்கடை ஒன்றில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாக்க-டையில் கிடந்த சடலத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சேலம் ஜவுளிக்-கடை பஸ் ஸ்டாப் அருகே மரத்தடியில் வழக்கமாக தங்கி இருப்-பதும், கிடைக்கும் வேலைகளை செய்து சம்பாதித்து வந்துள்ளார். அம்மாபேட்டை, வித்யா மந்திர் தெருவை சேர்ந்த யுவராஜ் என்-பதும், இவரது மனைவி மணிமேகலை, 42, சென்னை கோட்டூர்-புரத்தில் வீட்டு வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இவர் இரவு நேரத்தில் தவறி விழுந்தாரா அல்லது மது போதையில் விழுந்து இறந்தாரா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us