நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் நெத்திமேடு மணியனுார், வி.எம்.நகரை சேர்ந்தவர் பல்சர் குமார் என்ற கிருஷ்ணகுமார், 35. இவர் கடந்த, 2015ல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால், நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து கிருஷ்ணகுமாரை, அன்னதானப்பட்டி போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் நெத்திமேடு பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அன்னதானப்பட்டி போலீசார், பதுங்கி இருந்த கிருஷ்ணகுமாரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

