/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.54 லட்சம் வரி நிலுவையால் கணக்கு முடக்கம் வங்கி தகவலால் அதிர்ச்சியில் தொழிலாளி தர்ணா

ADDED : நவ 21, 2024 06:43 AM
ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, பண்ணப்பட்டியை சேர்ந்-தவர் சிலம்பரசன், 35. கூலித்தொழிலாளியான இவர், நேற்று நண்-பரிடம், 2,000 ரூபாய் கேட்டார். அவரும், சிலம்பரசன் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பினார். அதை எடுக்க, தீவட்டிப்பட்-டியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையத்துக்கு சென்றார். கணக்கில் பணம் இல்லை.
இதுகுறித்து வங்கி அதிகாரியிடம் கேட்டபோது, 'உங்கள் பெயரில், திருப்பூரில் இயங்கும் நிறுவனத்துக்கு வருமான வரி, 54.31 லட்சம் ரூபாய் கட்டாததால், வங்கி கணக்கு முடக்கப்பட்-டுள்ளது. இதுதொடர்பாக வருமான வரி அலுவலகம் அல்லது திருப்பூர் நிறுவனத்துக்கு சென்று விபரம் கேட்டுக்கொள்ளுங்கள்' என, கூறினர்.
அதிர்ச்சியடைந்த சிலம்பரசன், 'கூலிவேலை செய்யும் நான், எந்த நிறுவனத்திலும் வேலை செய்யவில்லை. 2,000 ரூபாய்க்கு வழி-யின்றி உள்ளேன். நான் எப்படி, 54 லட்சம் ரூபாய் வருமான வரி கட்ட முடியும்' என கேட்டார். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, அதே வங்கி முன், அரை மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் அவரே சென்றுவிட்டார்.