/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொடக்க கல்வியில் விதிமீறி ஊக்க ஊதிய உயர்வு ஆசிரியர் சம்பளத்தை மறுசீரமைக்க நடவடிக்கை

ADDED : மே 22, 2025 01:30 AM
சேலம், தொடக்க கல்வியில் விதிமீறி ஊக்க ஊதிய உயர்வு பெற்ற விவகாரத்தில், ஆசிரியர் சம்பளத்தை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில், 8,000க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
இதில் சம்பந்தப்பட்ட பாடங்களில் இல்லாமல், வேறு பாடங்களில் உயர்கல்வி படித்துவிட்டு பலரும் ஊக்க ஊதியம் வாங்கினர். குறிப்பாக தமிழ் ஆசிரியர், எம்.காம்., படித்துவிட்டு ஊக்க ஊதியம் பெற்றுள்ளார்.
இதுதொடர்பான நீதிமன்ற வழக்கில், தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட பாடப்பிரிவு தவிர, மற்ற பாடங்களில் ஊக்க ஊதிய உயர்வு பெற்ற ஆசிரியர்களின் சம்பளத்தை மறு சீரமைப்பு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி தொடக்க கல்வித்துறையில், ஊக்க ஊதிய உயர்வு பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை ஆய்வு செய்து, அனுமதிக்கப்பட்ட பாடம் தவிர்த்து, மற்ற பாடங்களில் ஊதிய உயர்வு பெற்றிருந்தால், அவர்களின் பணி பதிவேட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு வரும், 26, 27ல், மாவட்ட வாரியாக இணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் விபரங்களை ஒப்படைக்க, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.