கூடுதல் மின்மாற்றி அமைப்பு தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்
கூடுதல் மின்மாற்றி அமைப்பு தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்
ADDED : மார் 06, 2026 04:06 AM
ஆத்துார்: ஆத்துார், கல்பகனுார் ஊராட்சி பள்ளக்காட்டில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு விவசாயம், பாக்கு உடைக்கும் தொழில் செய்கின்றனர். ஆனால் போதிய மின்சார வசதி இல்லாததோடு, அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த மனுவால், 3 ஆண்டுக்கு முன் மின்மாற்றி அமைக்க, கம்பங்கள் மட்டும் அமைத்தனர். மின்மாற்றி அமைக்காததால், 'இதே நிலை தொடர்ந்தால், வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம்' என, கடந்த, 26ல், அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து மின்வாரியத்துறையினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து நேற்று, 63 கே.வி.ஏ., கொண்ட கூடுதல் மின்மாற்றி அமைத்து, மின்வினியோகம் வழங்கப்பட்டது. இதனால், 'கோரிக்கையை செய்தியாக வெளியிட்ட நாளிதழ்கள், மின்மாற்றி அமைத்த மின்வாரிய அலுவலர்களுக்கும் நன்றி. மேலும், தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்றுள்ளோம்' என, மக்கள் தெரிவித்தனர்.
