ADDED : ஏப் 23, 2026 05:41 AM
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில், 2026 - 27ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலை பதிவாளர் ராஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியார் பல்கலையில், 27 துறைகளில் முது-நிலை பட்டப்படிப்புகளில், 22 கலை மற்றும் அறி-வியல் பாடப்பிரிவுகளுக்கு நுழைவுத்தேர்வு வழி-யாகவும், 10 கலை மற்றும் அறிவியல் பாடப்பிரி-வுகளுக்கு நேரடி சேர்க்கை வழியாகவும், மாணவர் சேர்க்கை நடக்கிறது. நுழைவுத்தேர்வு சேர்க்கை பாடப்பிரிவு: எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், எம்.காம்., எம்.பி.ஏ., பொது மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேலாண்மை; எம்.எஸ்சி., பயன்பாட்டு உள-வியல், உயிர் வேதியியல், உயிரியல் தொழில்-நுட்பம், தாவரவியல், வேதியியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, கணினி அறிவியல், தரவு அறிவியல், உணவு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து, புவியமைப்பியல், கணித-வியல், நுண்ணுயிரியல், இயற்பியல், புள்ளி-யியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பியல், விலங்கியல், எம்.சி.ஏ.,நேரடி சேர்க்கை பாடப்பிரிவு: எம்.ஏ., பொரு-ளியல், வரலாறு, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், சமூகவியல்; எம்.எட்., நுாலகம் மற்றும் தகவல் அறிவியல்; எம்.எஸ்சி., ஆற்றல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், முதுகலை சமூகப்பணி; எம்.டெக்., ஆற்றல் தொழில்நுட்ப-வியல்; இரண்டு, 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளான இதழியல் மற்றும் மக்கள் தொடர்-பியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றுடன் இளநிலை தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளான உணவு அறிவியல், ஊட்டச்சத்து ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பியல்.மேலும் பட்டையப்படிப்புகள், பகுதி நேர, முது-கலை படிப்பான திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கும், மாணவர் சேர்க்கை நடக்கிறது. 2026 - 27ம் கல்வி ஆண்டு முதல், பெரியாரியல், அண்ணாயியல், கலைஞரியல் ஆகிய பகுதி நேர சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தர்மபுரி பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 8 முதுநிலை படிப்புக-ளுக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்-பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெரியார் பல்-கலை இணையதளமான, www.periyaruniversity.ac.in வழியே விண்ணப்பிக்கலாம்.
