/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாரமங்கலத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
/
தாரமங்கலத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
தாரமங்கலத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
தாரமங்கலத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 29, 2024 07:16 AM
தாரமங்கலம்: தாரமங்கலத்தில், அ.தி.மு.க., நகர செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்-கோவன் தலைமை வகித்து பேசியதாவது:தாரமங்கலம் நகர பகுதியில் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., 500 ஓட்டுகள் கூடுதலாக பெற்றது. அதேபோல், 2026 சட்டசபை தேர்-தலில் நகர நிர்வாகிகள் உழைத்து, 5,000 ஓட்டுகள் கூடுதலாக பெற்று, இ.பி.எஸ்., ஆட்சி மலர செய்து, வசந்த காலமாக மாற்ற வேண்டும். அ.தி.மு.க., 10 ஆண்டு கால ஆட்சியில் சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்த்தவில்லை. ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்த்தி, மக்களை
சிரமத்தில் தள்ளியுள்ளது. இவ்வாறு பேசினார்.தர்மபுரி மாவட்ட செயலர் அன்பழகன் பேசுகையில்,''இ.பி.எஸ்., ஆட்சி செய்தபோது கம்யூ.,- காங்., கட்சிகள் பல போராட்டங்-களை நடத்தினர். இன்று தி.மு.க., சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்திய போது, ஒரு போராட்டம் கூட
நடத்தவில்லை. ஆனால், மக்களுக்காக மனித சங்கிலி போராட்டம் நடத்தியது அ.தி.மு.க., தான். போதை பொருட்களை கட்டுப்படுத்த முடி-யாமல் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் அனைவரும் இணைந்து
செயலாற்றி, இ.பி.எஸ்., ஆட்சியை மலர செய்ய வேண்டும்,'' என்றார்.சங்ககிரி, ஓமலுார் எம்.எல்.ஏ.,க்கள் சுந்தரராஜன், மணி, ஒன்றிய செயலர் காங்கேயன், நகர செயலர் பாலசுப்ரமணியம் மற்றும் மாநில, மாவட்ட, நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.