/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜருகுமலை கிராமத்தில் நடந்து சென்று அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷ் ஓட்டு சேகரிப்பு

ADDED : ஏப் 16, 2024 07:19 AM
ஓமலுார் : ஜருகு மலை கிராமத்தில், அ.தி.மு.க.,வேட்பாளர் விக்னேஷ் நடந்து சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சேலம் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷ் நேற்று முன்தினம், வீரபாண்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஜருகு மலையில் உள்ள மக்களை சந்தித்து இரட்டை இலைக்கு ஆதரவு கோரினார். அப்போது அவர் பேசுகையில்,'' இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தருவேன். இரட்டை இலைக்கு ஓட்டளித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என்றார். வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஓமலுாரை அடுத்துள்ள தாரமங்கலம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அமரகுந்தி, எம்.ஓலைப்பட்டி, உப்பாரப்பட்டி ஆகிய பகுதியில் விக்னேஷ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அமரகுந்தி பகுதியில் இரட்டை இலைக்கு ஆதரவு கோரி, முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவர் பேசியதாவது: சேலம் அ.தி.மு.க., கோட்டையாகும். தி.மு.க., மீது உள்ள அதிருப்தி காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பெண்கள் ஆகியோர் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க.,வுக்கு எழுச்சி அலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவ்வாறு பேசினார்.ஓமலூர் எம்.எல்.ஏ., மணி, முன்னாள் எம்.எல்.ஏ.,கிருஷ்ணன், தாரமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமுத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.