ADDED : நவ 03, 2024 12:49 AM
சேலம், நவ. 3-
அ.தி.மு.க.,வின் சேலம் மாநகர் மாவட்ட புரட்சி தலைவி பேரவை செயலராக இருந்தவர் சரவணன். அதேபோல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலர் அசோக்குமார், மாணவரணி செயலரான, முன்னாள் எம்.எல்.ஏ., சக்திவேல், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலர் பிரபு, தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் நித்தின், கொண்டலாம்பட்டி, 2வது பகுதி செயலர் பாண்டியன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதில் நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி புரட்சி தலைவி பேரவை மாவட்ட செயலராக பிரகாஷ், இணை செயலர்களாக பாண்டியன், அசோக்குமார், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலர் குபேந்திரன், இணை செயலர் கவுரிசங்கர், மாணவரணி செயலர் மேபூப் அலி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலர் நித்தின், தகவல் தொழில்நுட்பப்பிரிவு பொருளாளர் பிரபு மணிகண்டன், கொண்டலாம்பட்டி, 2வது பகுதி செயலராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., சக்திவேல், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலராகவும், வக்கீல் பிரிவு மாநில துணை செயலராக தனசேகரன் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒத்துழைப்பு வழங்க, பொதுச்செயலர், இ.பி.எஸ்., கேட்டுக்கொண்டுள்ளார்.