ADDED : மார் 16, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:ஏரல் மார்க்கெட்தெரு சண்முக வேலாயுதம் மகன் சேர்மராஜதுரை (51). இவர் தெற்கு ஆத்துார் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வருகிறார். மார்ச் 13 கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு வந்த கீரனுார் கிருஷ்ணக்குமார்(40) ஓசியில் மது கேட்டுதகராறு செய்தார்.
பணம் இல்லாமல் மது தர மறுத்த சேர்மராஜதுரையை அவதுாறாகப் பேசி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சேர்மராஜதுரை கொடுத்த புகாரின் பேரில் ஆத்துார் போலீசார் வழக்குபதிவுசெய்து, கிருஷ்ணக்குமாரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டகி ருஷ்ணக்குமார், ஆத்துார் 18வது வார்டு அ.தி.மு.க. செயலாளராகவும், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராகவும் உள்ளார்.

