/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2024 01:58 AM
சேலம்;போதை பொருட்களால், வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிவுக்கு, தி.மு.க.,தான் காரணம் என கூறி, அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாநகர், புறநகர் மாவட்ட, அ.தி.மு.க. சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர்கள்
வெங்கடாஜலம், இளங்கோவன் தலைமை வகித்தனர். அமைப்பு செயலர் செம்மலை, கோரிக்கை குறித்து கண்டன உரை ஆற்றினார்.
தி.மு.க., அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு; தமிழகம் போதை பொருள் கேந்திரமாக மாறி மற்றும் வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவது; போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான விடியா தி.மு.க., அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் பாலசுப்பிரமணியன், ராஜமுத்து, மணி, சுந்தர்ராஜன், ஜெயசங்கரன், சித்ரா, நல்லதம்பி, முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம், முன்னாள் மேயர் சவுண்டப்பன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பகுதி செயலர்கள், ஒன்றிய செயலர்கள் உள்பட அ.தி.மு.க.,வினர் திரளாக கலந்து கொண்டனர்.

