/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பார்த்தீனியம் செடிகளை அழிக்க அறிவுரை
/
பார்த்தீனியம் செடிகளை அழிக்க அறிவுரை
ADDED : நவ 26, 2025 02:16 AM
மேட்டூர்,நோய்களை பரப்பும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க வேளாண் துறை அறிவுரை
வழங்கியுள்ளது.இதுகுறித்து மேச்சேரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜ் அறிக்கை: வெளிநாட்டில் இருந்து கோதுமை இறக்குமதி செய்தபோது, அத்துடன் பாத்தீனியம் செடிகளின் விதைகளும் சேர்ந்து வந்து, நாடு முழுதும் பரவியுள்ளது. இச்செடிகள் ஒருமுறை முளைத்தால் அதன் வீரியம் கால் நுாற்றாண்டு வரை நீடிக்கும். அச்செடிகள் பரவி வளர்வதால் அருகே வசிக்கும் குழந்தைகளுக்கு தீராத சளி, பெரியவர்களுக்கு தும்மல், அலர்ஜி போன்ற பிரச்னைகள் வருகின்றன.
மேலும் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்து பரவுவதால் விவசாயத்துக்கு உரமாக பயன்படும் பாரம்பரிய கொழிஞ்சி செடிகள் அழிந்து வருகின்றன. பார்த்தீனியம் செடிகளை அழிக்க விவசாயிகள் களைகொல்லிகளை தெளிக்கின்றனர். இதனால் கொழிஞ்சி செடிகள் மட்டுமே அழிகின்றன. பார்த்தீனியம் செடிகள் மேலும் வீரியமாக வளர்கின்றன. மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் வளரும் பார்த்தீனிய செடிகளால் வரப்புகள் வலுவிழந்து நீரில் அடித்து செல்லப்படுகிறது. அதை தடுக்க, 10 லிட்டர் நீரில், 5 கிலோ கல் உப்பை கரைத்து பார்த்தீனியம் செடிகளில் தெளித்தால் அவை கருகிவிடும். விதைகளும் வீரியம் குறைந்து விடும். விவசாயிகளுக்கு களை கொல்லி வாங்கும் செலவும் மிச்சம். விபரங்களுக்கு மேச்சேரி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை, விவசாயிகள் அணுகலாம்.

