ADDED : மார் 19, 2026 04:06 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்., 23ல் நடக்க உள்-ளது. தொடர்ந்து மே, 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு, சேலம், கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், தனித்தனி கட்டடத்தில், ஓமலுார், மேட்டூர், சேலம் மேற்கு, சேலம் கிழக்கு ஆகிய தொகுதிகளின் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. இதனால் ஓமலுார் தொகுதி ஓட்டு எண்ணும் மைய கட்டடத்தை, அத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபாலகிருஷ்ணன், நேற்று முன்தினம் பார்வையிட்டார். அங்கு, 'ஸ்டிராங் ரூம், ஓட்டு எண்ணும் அறை, தடுப்பு வேலி அமைப்பது குறித்து அதிகாரிக-ளுடன் ஆலோசித்தார். பின் கருப்பூரில் உள்ள ஓட்டுச்சாவடியை பார்வையிட்டர்.
