/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயிர் வளர்ச்சிக்கு உதவும் ரைசோபியம் விதை நேர்த்திக்கு பயன்படுத்த அறிவுரை

ADDED : டிச 28, 2024 02:31 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் அறிக்கை:
பயறு வகை பயிர்கள், 'ரைசோபியம்' எனும் நுண்ணுயிர் கூட்டு சேர்க்கையின் மூலம் தழைச்சத்தை பெற்று, நிலத்தை வளப்ப-டுத்தி பயிரின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. பயறு வகை பயிர்கள், ரைசோபியத்துக்கு உணவும், உறைவிடமும் அளிக்கின்றன. அதற்கு மாற்றாக ரைசோபியம், தழைச்சத்தை வழங்குகிறது. பயறு வகை பயிர்களும், ரைசோபியமும் இணைந்து வாழ்ந்து இரு உயிர்களும் பயனடைகின்றன.
விதை நேர்த்தி செய்ய ரைசோபியத்தை பயன்படுத்த வேண்டும். துவரை, கொண்டைக்கடலை, சோயா, மொச்சை, நிலக்கடலை உள்ளிட்ட அனைத்து பயறு வகை பயிர்களுக்கும் பயன்
படுத்தலாம். 50 மி.லி., திரவ நுண்ணுயிர் உரத்தை, அரிசி கஞ்சி-யுடன் சேர்த்து, ஒரு ஏக்கருக்கான விதையுடன் நன்கு கலக்க வேண்டும். விதைகளை, 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்திய பின் விதைக்கலாம்.
விதைத்த, 10 முதல், 20 நாட்களில், பயிரில் வேர் முடிச்சுகள் தோன்றும். அதில் தழைச்சத்தை நிலை நிறுத்தி வைக்கும். அவை, பூக்கும் தருணத்தில் அதிகரிக்கும். நாளடைவில் வேர் முடிச்சு சிதைந்து, மண்ணுக்கு வளம் சேர்க்கும். ரைசோபியத்தை பசுந்தாள் உரப்பயிர்கள், தீவனப்பயிர்களுக்கு பயன்படுத்தி பயன்-பெறலாம்.