/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க.,வினருக்கு மா.செ., அறிவுரை
/
அ.தி.மு.க.,வினருக்கு மா.செ., அறிவுரை
ADDED : அக் 05, 2024 01:13 AM
அ.தி.மு.க.,வினருக்கு
மா.செ., அறிவுரை
ஓமலுார், அக். 5-
ஓமலுார், கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள, அ.தி.மு.க.,வின் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அதில் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து பேசியதாவது: புது நிர்வாகிகள் தீவிர கட்சி பணியாற்ற வேண்டும். குறிப்பாக கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையாக பணிபுரிய வேண்டும். உறுப்பினர் அட்டை முறையாக வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. வரும் சட்டசபை தேர்தலை கவனத்தில் கொண்டு சிறப்பாக களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ.,க்கள் மணி, சித்ரா, ராஜமுத்து, ஓமலுார், வீரபாண்டி, மேச்சேரி, ஆத்துார் உள்ளிட்ட ஒன்றிய செயலர்கள், பேரூர் செயலர்கள் பங்கேற்றனர்.