/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறு குளம் கட்டும் பணி விரைந்து முடிக்க அறிவுரை
/
சிறு குளம் கட்டும் பணி விரைந்து முடிக்க அறிவுரை
ADDED : ஆக 20, 2025 01:49 AM
ஆத்துார், ஆத்துார் ஒன்றியத்தில், 4 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில், 172.15 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் குறித்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: ஆத்துார் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலம், கிராம சாலைகள் மேம்பாடு திட்டம், தேசிய ஊரக வேலை, பள்ளிகள் உட்கட்டமைப்பு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி, கனவு இல்லம், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம், 172.15 கோடி ரூபாய் மதிப்பில், 4,888 திட்டப்
பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. 4,338 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதி, 550 பணிகள் நடக்கின்றன.
துலுக்கனுாரில், மாநில நிதி திட்டத்தில், 4.27 கோடி ரூபாயில் வசிஷ்ட நதி குறுக்கே மேம்பாலம், ஊரக வேலை திட்டத்தில் சீலியம்பட்டி ஏரியில், 14.39 லட்சம் ரூபாயில் குளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஈச்சம்பட்டியில், 10 லட்சம் ரூபாயில் சிறு குளம், அரச
நத்தத்தில் வீடு கட்டுமானப்பணிகள் நடந்து வருவதை ஆய்வு செய்துள்ளேன். இப்பணிகளை விரைந்து, தரமான முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.