/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலும் தடுக்க அறிவுரை
/
ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலும் தடுக்க அறிவுரை
ADDED : நவ 22, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் குற்ற புலனாய்வு துறை எஸ்.பி., பாலாஜி நேற்று, இரும்பாலையில் உள்ள குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் போன்ற சம்பவங்களை தடுக்க, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து, 'சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் குறைந்துள்ளது. இருப்பினும் முற்றிலும் தடுக்க வேண்டும். அதற்கு கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை எஸ்.பி., வடிவேல் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.