/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு அறிவுரை
/
கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : மே 01, 2024 01:42 PM
வீரபாண்டி: கோடை பருவத்தில் குறுகிய கால பயிர்களான பயறு வகை பயிர்கள் செழித்து வளர்ந்து கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:
பயறு பகை பயிர்களை, வறட்சியை தாங்கி வளர விதைக்கும் முன் விதைகளை கடினப்படுத்துவது அவசியமாகிறது. ஒரு லிட்டர் நீரில், 100 கிராம் 'ஜிங்க் சல்பேட்' உப்பை கரைத்து அதில், 350 மி.லி., நீரில் ஒரு கிலோ துவரை விதையை, 3:00 மணி நேரம் ஊற வைத்து பின் நிழலில் உலர்த்தி காய வைத்து விதைக்க வேண்டும்.
அதேபோல், 100 கிராம் 'மாங்கனீஸ் சல்பேட்' உப்பு, ஒரு லிட்டர் நீரில் கரைத்து அதில் ஒரு கிலோ எடுத்து, பாசி பயறு விதையை, 3:00 மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி காய வைத்து விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான உளுந்து விதையை, 300 கிராம் 'ஜிங்க் சல்பேட்', 300 கிராம் மாங்கனீஸ் சப்பேட்', 3 லிட்டர் நீரில் கரைத்து ஊற வைத்து நிழலில் உலர்த்தி காய வைத்து கடினப்படுத்தி விதைப்பதால் கோடை பருவத்தில் குறுகிய கால பயிர்களான பயறு வகை பயிர்கள் செழித்து வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைக்கும். இந்த வழிமுறைகளை பின்பற்றி அதிக லாபம் பெற விவசாயிகள் முன்வர வேண்டும்.