/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கள்ளச்சாராயம் விற்றால் தகவல் கொடுக்க அறிவுரை
/
கள்ளச்சாராயம் விற்றால் தகவல் கொடுக்க அறிவுரை
ADDED : ஜூன் 28, 2024 02:13 AM
பனமரத்துப்பட்டி, சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், டாஸ்மாக் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சேலம் மண்டல டாஸ்மாக் மேலாளர் நர்மதாதேவி, கலால் உதவி கமிஷனர் மாறன், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தனஞ்செயன் தலைமை வகித்தனர்.
அதில் டாஸ்மாக் கடை சுற்றுப்புறங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்றல், சட்டவிரோத மது விற்பனை, போதை பொருட்கள் விற்பவர் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்; சந்து கடைகளுக்கு மொத்தமாக மதுபாட்டில் தரக்கூடாது; யாருக்கும் பெட்டி, பெட்டியாகவும் கொடுக்கக்கூடாது; டாஸ்மாக் கடை, அதன் பார், மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும்; பாரில் மது விற்றால் தகவல் தெரிவிக்க வேண்டும்; போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் அளிப்போர் குறித்த விபரம் ரகசியம் காக்கப்படும் என அறிவுறுத்தினர். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் கடை மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.