/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தகுதியான நிலத்தில் வீடு கட்டிய பயனாளிகளை தேர்வு செய்ய அறிவுரை
/
தகுதியான நிலத்தில் வீடு கட்டிய பயனாளிகளை தேர்வு செய்ய அறிவுரை
தகுதியான நிலத்தில் வீடு கட்டிய பயனாளிகளை தேர்வு செய்ய அறிவுரை
தகுதியான நிலத்தில் வீடு கட்டிய பயனாளிகளை தேர்வு செய்ய அறிவுரை
ADDED : நவ 14, 2024 07:40 AM
மேட்டூர்: மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் சேலம் டி.ஆர்.ஓ., மேனகா தலைமை வகித்து பேசியதாவது:
அனைத்து வருவாய் கிராமங்களிலும் பட்டா வழங்க தகுதியான நிலத்தில் வீடு கட்டியுள்ள பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். அதற்கான பட்டியலை, 20 நாட்களில் தயாரித்து அனுப்ப வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட வருவாய் கிராம அலுவலர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, ஆதிதிராவிடர் நலத்துறை துணை கலெக்டர் முருகேசன், பிற்பட்டோர் நலத்துறை துணை கலெக்டர் ஜெயகுமார், மேட்டூர் தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கள்,
வி.ஏ.ஓ.,க்கள், நில அளவையர்கள் பங்கேற்றனர்.