/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டெங்கு முன்னெச்சரிக்கை பணி மேற்கொள்ள அறிவுரை
/
டெங்கு முன்னெச்சரிக்கை பணி மேற்கொள்ள அறிவுரை
ADDED : ஆக 22, 2024 03:44 AM
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவில், 'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நேற்று நடந்தது. சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்துகளில் குடிநீர் வினியோகம், டெங்கு தடுப்பு, கொசுப்புழு கட்டுப்படுத்தல், பள்ளி, சத்துணவு, அங்கன்வாடி மையங்கள், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.
இதுகுறித்து பிருந்தாதேவி கூறுகையில், ''ஆக., 21 காலை, 9:00 முதல், 22 காலை, 6:00 மணி வரை ஆய்வு மேற்கொள்ளப்படும். மழை நீர் தேங்காதபடி பாதுகாப்பு பணி, டெங்கு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, தாசில்தார் ஜெயக்குமார், ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.