/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூக்கனேரி புனரமைப்பு பணியை காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுரை
/
மூக்கனேரி புனரமைப்பு பணியை காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுரை
மூக்கனேரி புனரமைப்பு பணியை காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுரை
மூக்கனேரி புனரமைப்பு பணியை காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுரை
ADDED : செப் 22, 2024 04:31 AM
சேலம்: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மூக்கனேரி, 23 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு, அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியை கலெக்டர் பிருந்தாதேவி நேற்று பார்வையிட்டார்.
தொடர்ந்து ஏரியில் துார்வாருதல், தடுப்பணை உறுதித்தன்மையை மேம்படுத்தல், சுவர் வலுப்படுத்தல், நடைப்பயிற்சி பாதை அமைத்தல், பாதுகாப்பு வேலி அமைத்தல், இருக்கை வசதி, மரம் நடுதல், கூடாரம் அமைத்தல், குழந்தைகள் விளையாடும் பகுதி, தியான பகுதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடந்தது. அதில் மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் உள்பட பலர் பங்கேற்றனர்.