/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால பைரவர் சிலைக்கு சதாசிவாஷ்டமி பூஜை
/
கால பைரவர் சிலைக்கு சதாசிவாஷ்டமி பூஜை
UPDATED : மே 21, 2025 06:29 AM
ADDED : மே 21, 2025 01:42 AM
ஆத்துார், ஆறகளூர் கால பைரவருக்கு, 26 லட்சம் ரூபாயில் வெள்ளி கவசம் வழங்கி, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., சிறப்பு வழிபாடு செய்து, அன்னதானம் வழங்கினார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, ஆறகளூரில் பழமைவாய்ந்த காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
நேற்று வைகாசி மாத, சதாசிவாஷ்டமியையொட்டி கால பைரவருக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., சார்பில், வெள்ளி கவசம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5:00 மணியளவில், கெங்கவல்லி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், பக்தர்கள் காத்திருப்பு கூடம் உள்பட 2.65 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள் கெங்கவல்லி நல்லதம்பி, ஆத்துார் ஜெயசங்கரன், வீரபாண்டி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

