/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெல் அறுவடைக்கு கூலியாட்கள் இல்லை விவசாயிகளுக்கு உதவிய வேளாண் துறை
/
நெல் அறுவடைக்கு கூலியாட்கள் இல்லை விவசாயிகளுக்கு உதவிய வேளாண் துறை
நெல் அறுவடைக்கு கூலியாட்கள் இல்லை விவசாயிகளுக்கு உதவிய வேளாண் துறை
நெல் அறுவடைக்கு கூலியாட்கள் இல்லை விவசாயிகளுக்கு உதவிய வேளாண் துறை
ADDED : மே 02, 2025 01:37 AM
கிருஷ்ணகிரி:
வயலில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்லை, அறுவடை செய்ய கூலியாட்கள் கிடைக்காமல் தடுமாறிய
விவசாயி அளித்த தகவ
லின்படி, வேளாண் துறை
யினர் இயந்திரம் கொண்டு,
நெல் அறுவடை செய்து கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்
டம், ஊத்தங்கரை அருகே, உக்கிரம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன், 55. ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தற்போது விவசாயம் செய்து வருகிறார்.
தன் வயலில் நெல் சாகுபடி செய்திருந்தார். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. ஆனால் அறுவடை செய்ய கூலியாட்கள் கிடைக்
காததால், நெற்பயிர்கள் அனைத்தும் வயலிலேயே வீணாவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு, நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
மாவட்ட கலெக்
டர் தினேஷ்குமாரின்
உத்தரவின் படி, வேளாண்
இணை இயக்குனர்
பச்சையப்பன், நெல் அறுவடை செய்யும் இயந்திரத்துடன் சென்று, வயலில் நெல்லை அறுவடை செய்து விவசாயிடம் வழங்கினார்.
நெல்லை அறுவடைக்கு உதவி செய்த, மாவட்ட கலெக்டர் மற்
றும் வேளாண் துறைக்கு விவசாயி நாகராஜன் நன்றி
தெரிவித்தார். மேலும், வேளாண் துறை வாட்|
ஸாப் குழுவில், இந்த விவ
சாயி இணைக்கப்பட்டு, எந்த உதவி தேவையென்றாலும், அதில் பதிவிடுமாறு, வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் தெரிவித்தார்.