தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள் தள்ளுமுள்ளு

அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள் தள்ளுமுள்ளு

அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள் தள்ளுமுள்ளு


ADDED : ஏப் 24, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: காடையாம்பட்டி, பண்ணப்பட்டி ஊராட்சி மாரக்கவுண்டன்புதுாரில் உள்ள ஊராட்சி ஒன்-றிய துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில் நேற்று மதியம், 1:00 மணிக்கு அ.தி.மு.க., ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், ஒன்றிய செயலர் சித்தேஸ்வரன் ஆகியோர், ஓட்டுப்பதிவு குறித்து பார்வையிட்டு வெளியே வந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., நிர்-வாகி சதீஷ், கான்ட்ராக்டர் குப்புசாமி ஆகியோர், 'ஓட்டுச்சாவடிக்குள் சென்று ஆதரவு கேட்கிறீர்-களா? ஏன் சென்றீர்கள்' என கேட்டனர்.

அதற்கு, 'நாங்கள் பொது ஏஜன்ட். அதனால் ஓட்-டுப்பதிவு குறித்து பார்க்க வந்தோம். ஓட்டு கேட்க வரவில்லை' என பதில் அளித்தனர். தொடர்ந்து இருதரப்பினரும் வாக்குவாதம் செய்து, தள்ளு-முள்ளுவில்

ஈடுபட்டனர்.

அங்கிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தனர். பின் காடையாம்பட்டி போலீசார் வந்து பேச்சு நடத்தினர். இருதரப்பும் சமாதான-மாக செல்வதாக போலீசாரிடம் தெரிவித்து கலைந்து

சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us