/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு அலுவலகம் திறப்பு
/
அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு அலுவலகம் திறப்பு
ADDED : செப் 25, 2025 02:06 AM
தலைவாசல் :கெங்கவல்லி சட்டசபை தொகுதி, தலைவாசலில், அ.தி.மு.க.,வின், தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. அதில் அலுவலகத்தை திறந்து வைத்து, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
கெங்கவல்லி தொகுதியில் முதல் கட்டமாக, ஐ.டி., பிரிவு சார்பில், 30,000 பேர் வாட்ஸாப் குழு மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த குழு மூலம், பொதுச்செயலரின் அறிக்கை, அ.தி.மு.க., ஆட்சியின் சாதனை திட்டங்கள், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் தொகுத்து அனுப்பப்படும். ஐ.டி., பிரிவு, கட்சி நிர்வாகிகள், இக்குழுவில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், ஒன்றிய, பேரூர் செயலர்கள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.