/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாதம் ரூ.1 கோடி கொள்ளையடிப்பதாக குற்றச்சாட்டு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வழக்கம்போல் வெளிநடப்பு
/
மாதம் ரூ.1 கோடி கொள்ளையடிப்பதாக குற்றச்சாட்டு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வழக்கம்போல் வெளிநடப்பு
மாதம் ரூ.1 கோடி கொள்ளையடிப்பதாக குற்றச்சாட்டு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வழக்கம்போல் வெளிநடப்பு
மாதம் ரூ.1 கோடி கொள்ளையடிப்பதாக குற்றச்சாட்டு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வழக்கம்போல் வெளிநடப்பு
ADDED : ஜூலை 26, 2025 01:41 AM
சேலம், ''திட்ட மதிப்பீடுகளை திருத்தி, அதிகாரிகள் வழங்கும் தவறான அறிக்கை யால், மாதம், 1 கோடி ரூபாய் வரை கொள்ளை நடக்கிறது,'' என, எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி கூறிய பின், மாநகராட்சி கூட்டத்தில் இருந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சேலம் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
செல்வராஜ்(எதிர்க்கட்சி கொறடா): என் வார்டு பணி ஒப்பந்தத்தில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. அதனால் மழைநீர் வடிகால் பணி, 2 ஆண்டாக இழுபறியில் உள்ளது. அந்த
ஒப்பந்தத்தை ரத்து செய்து, மறு ஒப்பந்தம் விடுவதோடு, விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும்.
பவுமிகா தப்சிரா(தி.மு.க.,): வ.உ.சி., மார்க்கெட்டில் சாக்கடை வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கி பூ மார்க்கெட் துர்நாற்றம் வீசுகிறது. மீண்டும் கடைகள் ஆக்கிரமிப்பால் இடநெருக்கடி நிலவுகிறது.
தெய்வலிங்கம்(தி.மு.க.,): அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர், கூட்டத்தை வீடியோ எடுப்பதால், அவர்களை வெளியேற்ற வேண்டும்.
இதற்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தெய்வலிங்கத்தை வெளியேற்றக்கோரி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேயர் ராமச்சந்திரன் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்.
யாதவமூர்த்தி (எதிர்க்கட்சி தலைவர்): வ.உ.சி., மார்க்கெட் புது டெண்டர் முறையால், ஆண்டுக்கு 8 கோடி ரூபாய், மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. மேலும் திட்ட மதிப்பீடுகளை திருத்தி, அதிகாரிகள் வழங்கும் தவறான அறிக்கையால், மாதம், 1 கோடி ரூபாய் வரை கொள்ளை நடக்கிறது. என் மீது தாக்கு தல் நடத்திய தி.மு.க., கவுன்சிலர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், வெளிநடப்பு செய்கிறோம்.
தொடர்ந்து, அ.தி.மு.க., வினர், ஒவ்வொரு கூட்டத்தை போன்று, இந்த கூட்டத்தில் இருந்தும் வழக்கம்போல் வெளியேறினர். அப்போது, 'மாநகராட்சி நிர்வாகத்தை
கண்டிக்கிறோம்' என குரல் எழுப்பியபடி சென்றனர்.
இதையடுத்து மற்ற கவுன்சிலர்கள் பேசினர். துணை மேயர் சாரதாதேவி உள்பட, தி.மு.க., - அ.தி.மு.க., - வி.சி., உள்ளிட்ட கவுன்சிலர்கள், அதிகாரிகள்
பங்கேற்றனர்.
'கூட்டு சேர்ந்து முறைகேடு'
வெளிநடப்பு குறித்து யாதவமூர்த்தி கூறுகையில், ''மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்த பணிகளில் மேயர் துணையுடன் அதிகாரிகள், தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டு சேர்ந்து, மாதந்தோறும் முறைகேடு செய்கின்றனர். அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு, நிதி ஒதுக்குவதில்லை. எந்த பணியும் செய்வது கிடையாது. தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளில் எல்லா பணிகளும் நடக்கின்றன,'' என்றார்.